தொடர்மாடி குடியிருப்புகள் சில தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு 

தொடர்மாடி குடியிருப்புகள் சில தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு 

தொடர்மாடி குடியிருப்புகள் சில தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2020 | 6:15 pm

Colombo (News 1st) நாளைய தினம் (14) அதிகாலை 05 மணி முதல் நாட்டின் சில பகுதிகளில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தலை நீக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், கிரேண்ட்பாஸ் – சிரிசந்த செவண, சிரிமு(த்)து உயன, மாளிகாவத்தை லக்ஹிரு செவண ரயில் மாடி குடியிருப்பு, பொரளை சிரிசர உயன குடியிருப்பு தொகுதிகள் நாளை அதிகாலை 05 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இவைதவிர, வத்தளை – கெரவலப்பிட்டிய, ஹேகித்தை, குருந்துவத்தை, எவரிவத்தை, வெலிக்கடமுல்லை ஆகிய கிராம சேவகர் பகுதிகள் மற்றும் பட்டிய வடக்கு கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்