துபாயிலிருந்து வழிநடத்தப்படும் போதைப்பொருள் கடத்தல்…

துபாயிலிருந்து வழிநடத்தப்படும் போதைப்பொருள் கடத்தல்…

துபாயிலிருந்து வழிநடத்தப்படும் போதைப்பொருள் கடத்தல்…

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2020 | 1:40 pm

Colombo (News 1st) துபாயிலிருந்து வழிநடத்தப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களனி பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்கின்றார்.

களனி பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

துபாயிலிருந்து வெவ்வேறு வழியாக போதைப்பொருட்களை இலங்கைக்கு கொண்டுவந்தமை, அவற்றை கடல் மார்க்கமாக கடத்துவதற்கு திட்டமிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சந்தேக நபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சந்தேக நபர்கள் மூவரையும் தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்