தபால் திணைக்களத்தினால் புதிய சேவை அறிமுகம்

தபால் திணைக்களத்தினால் புதிய சேவை அறிமுகம் 

by Staff Writer 13-12-2020 | 1:59 PM
Colombo (News 1st) பொதிகளை வீடுகளுக்கே கொண்டுசென்று விநியோகிக்கும் சேவையினை தபால் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்தச் சேவையினை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டத்தில் 50,000 ரூபா வரையான பெறுதியுடைய பொருட்களை வீடுகளில் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். எதிர்வரும் நாட்களில் 50,000 இற்கும் அதிக பெறுமதியுடைய பொருட்களையும் வீடுகளுக்கே கொண்டுசென்று விநியோகிக்கும் நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாகவும் தபால் மா அதிபர் அறிவித்துள்ளார். இதற்கு முன்னர் காணப்பட்ட நடைமுறைகளுக்கு அமைய பொதிகளில் வரும் பொருட்களை பெற்றுக் கொள்ளும் நபர், தபால் அலுவலகத்திற்கு வருகைதர வேண்டியிருந்ததாகவும் தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.