உடுவில் கோட்டக்கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

உடுவில் கோட்டக்கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

உடுவில் கோட்டக்கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

எழுத்தாளர் Staff Writer

13 Dec, 2020 | 10:06 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம், வலிகாமம் – உடுவில் கோட்டக்கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

யாழ். உடுவில் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வலயக்கல்வி பணிப்பாளர் உதயகுமார் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இதேவேளை, வவுனியா – சாளம்பைக்குளம் அல் அக்‌ஷா முஸ்லிம் பாடசாலை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.

சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் மு. இராதாகிருஸ்ணன் நியூஸ்பெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.

வவுனியா – சாளம்பைக்குளத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்