by Staff Writer 12-12-2020 | 2:36 PM
Colombo (News 1st) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணத்தால் அவர் தற்போது சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
இதுவரை சிறைச்சாலைகளில் 2,780 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் 98 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் உடனடி COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் இரண்டாயிரம் கைதிகளுக்கு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
அவர்களில் 129 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 890 கைதிகளும் 46 உத்தியோகஸ்தர்களும் இதுவரை குணமடைந்துள்ளனர்.