சுப்பர் ஸ்டார் பிறந்தநாளில் விசேட யாக பூஜைகள்

சுப்பர் ஸ்டார் பிறந்தநாளில் விசேட யாக பூஜைகள்

சுப்பர் ஸ்டார் பிறந்தநாளில் விசேட யாக பூஜைகள்

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2020 | 6:43 pm

தமிழ் திரையுலக சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70 ஆவது பிறந்தநாளை இன்று (12) கொண்டாடுகின்றார்.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு இராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சிறப்பு யாக பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

திரையுலக நடிகர் ரஜினிகாந்த் நீடூழி வாழ வேண்டியும் விரைவில் தமிழக முதல்வராக வேண்டியும் ரஜினியின் பிறந்தநாளில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

அத்துடன், உலகளாவிய ரீதியிலுள்ள சுப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் அவரின் பிறந்தநாளை அன்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்திற்கு பாரத பிரதமர், அரசியல் தலைவர்கள், திரையுலகத்தினர் தமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணமுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்