கண்டியில் மூடப்பட்டுள்ள 42 பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளன 

கண்டியில் மூடப்பட்டுள்ள 42 பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளன 

கண்டியில் மூடப்பட்டுள்ள 42 பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளன 

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2020 | 2:48 pm

Colombo (News 1st) கண்டி நகர எல்லைக்குள் மூடப்பட்டுள்ள பாடசாலைகளில் 42 பாடசாலைகளை மீள திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த பாடசாலைகளில் 6 ஆம் தரம் தொடக்கம் 13 ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் U.கமகே குறிப்பிட்டார்.

எனினும், கண்டி கலைமகள் வித்தியாலயம் , திருத்துவக்கல்லூரி மற்றும் தக்ஷிலா கல்லூரி ஆகியன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அவர் கூறினார்.

இந்த பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

பொது போக்குவரத்து சேவையில் பாடசாலை மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் U.கமகே மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்