ஆசிய பிரபலங்கள் பட்டியலில் முதலிடத்தில் சோனு சூட்

ஆசிய பிரபலங்கள் பட்டியலில் முதலிடத்தில் சோனு சூட்

ஆசிய பிரபலங்கள் பட்டியலில் முதலிடத்தில் சோனு சூட்

எழுத்தாளர் Bella Dalima

11 Dec, 2020 | 4:32 pm

லண்டன் நாளிதழ் வெளியிட்டுள்ள ஆசிய பிரபலங்களின் பட்டியலில் பொலிவுட் நடிகர் சோனு சூட் முதலிடம் பிடித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கால் அவதிப்பட்ட பலருக்கும் உதவிகள் செய்து இந்திய அளவில் புகழ் பெற்றவர் பொலிவுட் நடிகர் சோனு சூட்.

பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று சேர்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சிலரை விமானம் மூலமாகவும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

இதுபோன்ற உதவிகளினால் திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் பாராட்டுக்களை சோனு சூட் பெற்றார்.
ஊரடங்கு காலத்தில் செய்த உதவிகள், அதன் அனுபவங்களின் தொகுப்பாக, புத்தகம் ஒன்றையும் அவர் எழுதி வருகிறார்.

இந்நிலையில், ஆசிய பிரபலமாக சோனு சூட் தெரிவாகியுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த Eastern Eye என்கிற நாளிதழ் வெளியிட்டுள்ள உலகின் 50 ஆசிய பிரபலங்களின் பட்டியலில் சோனு சூட் முதலிடம் பிடித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்