2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றில் நிறைவேற்றம் 

by Bella Dalima 10-12-2020 | 6:18 PM
Colombo (News 1st) 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்றது. இதன்போது, வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி, வரவு செலவுத் திட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இன்று மாலை வாக்களிப்பு நடத்தப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பிரதமரும் நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸவினால் வரவு செலவுத் திட்ட அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2678 பில்லியன் ரூபா அரச செலவாகவும் 2900 பில்லியன் ரூபா கடன் வரையறைகளுக்கு உட்பட்டு கடனை பெறுவதற்குமான பரிந்துரைகளுடன் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஏனைய செய்திகள்