தொடர்ந்தும் தனிமைப்படுத்தலின் கீழுள்ள பகுதிகள்

தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள்

by Chandrasekaram Chandravadani 10-12-2020 | 12:06 PM
Colombo (News 1st) தற்போது நிலவும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் சில பாகங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதனடிப்படையில், கொழும்பு மாவட்டத்தின் முகத்துவாரம், கிரேண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, மருதானை, தெமட்டகொடை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய 09 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. வேகந்தை, வணாத்தமுல்லை, சாலமுல்ல, ஹுனுப்பிட்டி, 60ஆம் தோட்டம், கோகிலா வீதி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் ரந்திய உயன, லக்‌சந்த செவன மற்றும் பெர்கஸன் வீதி தெற்கு ஆகிய தொடர்மாடி குடியிருப்புகளும் தனிமைப்படுத்தலின் கீழுள்ளன. இதேவேளை, இப்(B)பன்வல சந்தியிலிருந்து வொக்ஸோல் வீதி வரையிலும் யூனியன் பிளேஸ் பகுதியிலிருந்து டோசன் வீதி வரையிலும் கொம்பனிவீதியிலிருந்து கியூ வீதி மற்றும் முருகன் வீதி வரைக்கும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று, கம்பஹா மாவட்டத்தின் கெரவலப்பிட்டி, ஹேகித்தை, குருந்துஹேன, எவரிவத்தை, வெலிக்கடமுல்லை, பேலியகொடைவத்தை, பேலியகொடை கங்கபட, மீகாவத்தை, பட்டிய வடக்கு மற்றும் வெலேகொடை வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுலிலுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் அடலுகம கிழக்கு, அடலுகம மேற்கு, எபிடமுல்லை, போகஹவத்தை, கொரவல, கல்கெமந்திய மற்றும் பமுனுமுல்லை ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, கண்டி மாவட்டத்தின் புளுகஹதென்ன, தெலம்புகஸ்வத்தை, போகம்பரை மற்றும் பூர்னாவத்தை மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுலிலுள்ளது. புத்தளம் மாவட்டத்தின் வெரலபட, வெரலபட தெற்கு, வெரலபட வடக்கு, எகொடவத்தை மற்றும் குருசபதுவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று, அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தலின் கீழுள்ளமை குறிப்பிடத்தக்கது.