பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2020 | 6:29 pm

Colombo (News 1st) பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் எதிர்வரும் நாட்களில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இதனிடையே, இலங்கை இராணுவத்தின் அலுவலக தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டியவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அவர் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கடமைகளை பொறுப்பேற்பார் என இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்தார்.

இராணுவ தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன எதிர்வரும் 14 ஆம் திகதி இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில் உருவாகும் வெற்றிடத்திற்காக மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்