பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Dec, 2020 | 11:23 am

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற இந்திய தொலைக்காட்சி தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர், தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர்.

சித்ரா தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

28 வயதான சித்ராவின் திடீர் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் திருமண பந்தத்தில் இணையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சித்ராவின் இந்த திடீர் மரணமானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்