ட்ரம்ப்பின் மேன்முறையீட்டை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

ட்ரம்ப்பின் மேன்முறையீட்டை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

ட்ரம்ப்பின் மேன்முறையீட்டை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Dec, 2020 | 2:59 pm

Colombo (News 1st) பென்சில்வேனியா தேர்தல் முடிவுகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் மேன்முறையீட்டை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எனினும், இந்த தீர்ப்பிற்கான காரணத்தை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தவில்லை.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப் இதுவரை தமது தோல்வியை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகின்றார்.

முக்கிய தேர்தல் கல்லூரிகளில் பதிவான முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ட்ரம்ப், மனு தாக்கல் செய்துள்ளார்.

4 வருடங்களுக்கு முன்னர் பென்சில்வேனியாவை ட்ரம்ப் கைப்பற்றியிருந்த போதிலும் இம்முறை நடைபெற்ற தேர்தலில் ஜோ பைடன் அங்கு வெற்றி பெற்றுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்