உறவினர் பொறுப்பேற்காத சடலங்களை தகனம் செய்ய ஆலோசனை

கொரோனா மரணம்: உறவினர்கள் பொறுப்பேற்காத சடலங்களை தகனம் செய்ய சட்ட மா அதிபர் ஆலோசனை

by Staff Writer 09-12-2020 | 6:11 PM
Colombo (News 1st) உறவினர்கள் இதுவரை பொறுப்பேற்காத, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை உடனடியாக தகனம் செய்யுமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். உறவினர்களினால் பொறுப்பேற்கப்படாத 19 சடலங்கள் வைத்தியசாலைகளின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சட்ட மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். குறித்த சடலங்களை தொடர்ச்சியாக வைத்திருப்பதால் சுகாதார ரீதியிலான பாரதூரமான பாதிப்பு ஏற்படும் என்பதால், பொருத்தமான ஆலோசனைகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சட்ட மா அதிபரினால் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்