காணாமற்போயிருந்த வௌிநாட்டு மதகுருவின் சடலம் மீட்பு 

காணாமற்போயிருந்த வௌிநாட்டு மதகுருவின் சடலம் மீட்பு 

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2020 | 1:34 pm

Colombo (News 1st) காலி – ரத்கம களப்பு பகுதியில் வௌிநாட்டு தேரர் ஒருவரின் பூதவுடல் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் இவர் காணாமல் போனமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வௌிநாட்டிலிருந்து வருகை தந்து காலி – ரத்கம பகுதியிலுள்ள தபோவனம் ஒன்றில் மத போதனையில் ஈடுபட்ட தேரர் ஒருவரின் பூதவுடலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்