இந்தியாவில் சிக்கியுள்ளவர்களை கப்பல் மூலம் அழைத்துவரும் திட்டத்திற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது: டக்ளஸ்

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2020 | 6:48 pm

Colombo (News 1st) கொரோனா முடக்கத்தால் தென்னிந்தியாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை கட்டங்கட்டமாக கப்பல் மூலம் இலங்கைக்கு அழைத்துவர இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை முன்னேற்றகரமாக அமைந்துள்ளதென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கொரோனா முடக்கத்தால் தென்னிந்தியாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை கட்டம் கட்டமாக கப்பல் மூலம் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.

15,000-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இந்தியாவில் சிக்கியுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்