பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதி

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க அனுமதி

by Staff Writer 08-12-2020 | 5:38 PM
Colombo (News 1st) தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மூன்று கட்டங்களாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. முதலாவது கட்டத்தில், தற்போது தேசிய பாடசாலைகள் இல்லாத 123 பிரதேச செயலக பிரிவுகளில் ஒரு மாகாண சபை பாடசாலை வீதம் தெரிவு செய்து அதனை தேசிய பாடசாலையாக தரமுயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படும் அளவுகோலுக்கு அமைய தெரிவு செய்யப்படும் 673 பாடசாலைகள், இரண்டாம் கட்டத்தின் கீழ் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. தற்போது தேசிய பாடசாலைகளாக காணப்படும் 373 பாடசாலைகளை மூன்றாம் கட்டத்தின் கீழ் மேலும் அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சொய்சாபுர மீள் வீடமைப்பு திட்டத்தின் கீழ் 30 வீடுகளைக் கொண்ட இரண்டு கட்டடங்களை நிர்மாணிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 550 சதுர அடியுடைய 20 வீடுகளைக் கொண்ட கட்டடம் ஒன்றையும், 10 வீடுகளைக் கொண்ட கட்டடம் ஒன்றையும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.