by Fazlullah Mubarak 06-12-2020 | 8:00 PM
முன்னாள் அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க காலமானார்.
சுகயீனமுற்ற நிலையில் குருநாகல் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அன்னார், தனது 67 ஆவது வயதில் இன்று காலை காலமானார்.
டீ.பி. ஏக்கநாயக்க, கலாசார மற்றும் கலைத்துறை அமைச்சரகவும் காணி இராஜாங்க அமைச்சராகவும் கல்வி பிரதி அமைச்சராகவும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சராகவும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.