சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்படுமா?

சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்படுமா? விசேட பேச்சுவார்த்தை இன்று 

by Staff Writer 05-12-2020 | 9:11 AM
Colombo (News 1st) சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை மீள திறப்பதற்கு தேவையான பரிந்துரைகளை தயாரிப்பதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை, சுகாதார அமைச்சு மற்றும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த விசேட குழுவில் அடங்குவதாக சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தைத் திறப்பதில் உள்ள நடைமுறை பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் கூறினார்.