உடனடி COVID பரிசோதனைகள் தொடர்பான வௌிக்கொணர்வு

உடனடி பரிசோதனைகளினால் COVID - 19 தொற்றை 50% கண்டறிய முடியாது என வௌிக்கொணர்வு

by Staff Writer 05-12-2020 | 10:31 PM
Colombo (News 1st) உடனடி COVID - 19 பரிசோதனைகளின் மூலம் COVID - 19 தொற்றை நூற்றுக்கு 50 வீதம் கண்டுபிடிக்க முடியவில்லை என தி இன்டிபென்டன் யூ.கே. செய்தித் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. COVID - 19 உடனடி பரிசோதனைகள் தொடர்பான அந்நாட்டின் பகுப்பாய்வை மேற்கோள்காட்டியே தி இன்டிபென்டன் யூ.கே செய்தித் தளம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய மருத்துவ சஞ்சிகையின் பிரகாரம், அந்நாட்டு அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக லிவர்பூலில் மக்கள் பரிசோதனை பயன்படுத்தப்படும் உபகரணங்களின் மூலம் நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளில் ஒரு பகுதியினர் மாத்திரமே COVID - 19 நோயாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். உடலில் கூடுதல் வைரஸ்களை கொண்டவர்களிடம் பக்கவாட்டு சாதனங்கள் மூலம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 10 இல் மூவர் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரித்தானிய மருத்துவ சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன் ஊடாக பல்கலைக்கழக மாணவர்கள் வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளதுடன் முதியோர் இல்லங்களில் இருக்கும் குடும்ப உறவினர்களை இயலுமான வரையில் உடனடி பரிசோதனைக்குட்படுத்த, பயணங்களின் போது சமூக இடைவெளியை குறைக்கவும் பிரித்தானியா முழுவதும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக த இன்டிபென்டன் யூ.கே. செய்தித் தளம் தெரிவிக்கின்றது. பயன்படுத்தப்படும் பக்கவாட்டு சாதனங்களின் குறைந்த உணர்திறன் காரணமாக முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் நத்தார் பண்டிகை காலத்தில் தமது உறவினர்களுடன் பாதுகாப்பாக தொடர்புபடுவதற்கு இருக்கும் இயலுமை அதேபோன்று மாணவர்கள் தமக்கு தொற்றில்லை என்பதனை எவ்வாறு உறுதி செய்வதென அந்நாட்டு நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக பிரித்தானிய சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக உடனடி COVID - 19 பரிசோதனை உபகரணங்களை செயலிழப்பதால் நோய் அறிகுறியற்ற COVID - 19 நோயாளர்களால் அந்த வைரஸ் முதியோர் இல்லங்களுக்கோ அல்லது தமது வீடுகளுக்கோ காவிக்கொண்டுவரும் அபாயம் அதிகரித்துள்ளதாக த இன்டிபென்டன் யூ.கே செய்தித் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பக்கவாட்டு சாதனங்களின் தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக விசேட நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக த இன்டிபென்டன் யூ.கே. செய்தித்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. PCR பரிசோதனைகளில் அடையாளம் காணப்பட்ட 10 நோயாளர்களில் ஐவர் மாத்திரமே இந்த பரிசோதனைகள் ஊடாக உறுதி செய்யப்பட்டதாக பிரித்தானிய சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு திணைக்களம் - லிவர்பூலில் துறைசார் கண்காணிப்பு வடிவத்தில் வெளியிட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கூடுதல் வைரஸ் உடல் கலந்துள்ள 10 பேர் PCR பரிசோதனைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டாலும் உடனடி COVID - 19 பரிசோதனை திட்டத்தின் மூலம் 5 பேரை மாத்திரமே அடையாளம் காணமுடிகிறது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று உடலில் கலந்துள்ளவர்களில் மூன்றில் ஒருவரை அடையாளம் காண முடியாதென்பதால் குறித்த பரிசோதனை திட்டம் அழிவுக்குறியது என பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பீடம் தொடர்பான பேராசிரியர் ஜோன் டீக்ஸை மேற்கோள்காட்டி பிரித்தானிய சஞ்சிகை தெரிவிக்கின்றது. முதியோர் இல்லங்களில் பாதுகாப்பாக நுழைவதற்கு, சுகாதார ஊழியர்கள் மீண்டும் சேவைக்கு சமூகமளிக்கவோ அல்லது மாணவர்கள் மீண்டும் கல்வி கற்பதற்கு இந்த பரிசோதனைகளின் பெறுபேறுகளை எவ்வாறு பயன்படுத்துவதென பேராசிரியர் கேள்வி எழுப்பியுள்ளதாக பிரித்தானிய மருத்துவ சஞ்சிகை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை பிரித்தானிய அரசாங்கத்தின் COVID - 19 தடுப்பு நோக்கங்களுக்கு பொருத்தமில்லை என அவர் தீர்மானித்திருப்பதாக பிரித்தானிய மருத்துவ சஞ்சிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பரிசோதனைகள் ஔடதமாக கருதப்படுமானால் உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் என ஜோன் டீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளதாக த இன்டிபென்டன் யூ.கே. செய்தி தளம் தெரிவிக்கின்றது.
கடந்த சில வாரங்களாக ஆன்டிபயோடிக் பரிசோதனைகள் தொடர்பாக அதிகம் பேசப்பட்டது. எனக்கு தெரிந்த வரையில் நாம் இவை மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக விரிவான விளக்கம் இருக்க வேண்டும். எவரேனுமொரு தொற்றாளரின் உடலில் வைரஸின் அளவு அதிகரித்தால் மாத்திரமே இந்தப் பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படும். எனவே, இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்களின் உடலில் வைரஸ் கலந்துள்ள கால எல்லையும், வைரஸின் அளவும் மிகவும் குறைந்த அளவில் இருக்க வேண்டும். நோய் தொற்று ஏற்பட்டும் நோய் அறிகுறிகள் வௌளிப்படாமை குறித்து கவனம் செலுத்த வேண்டும். எனவே, இந்தப் பரிசோதனையின் மூலம் ஒருவருக்கு தொற்றில்லை எனும் தீர்மானத்துக்கு வர முடியாது. வைரஸ் இல்லை என்று இந்தப் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பலர் நடமாடுவதற்கு தயாராவதாக எனக்கு அறியக்கிடைத்தது. அவ்வாறானவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுகிறேன். நீங்கள் நோய் இல்லை என்ற நம்பிக்கையுடன் இன்று அல்லது நாளை வரையே இருக்க முடியும். அடுத்த வாரத்தில் இது மாறலாம்.
என COVID - 19 பரிசோதனை தொடர்பான கொக்ரான் ஆராய்ச்சியகத்தின் தலைவர் பேராசிரியர் ஜோன் டீக்ஸ் தெரிவித்துள்ளார். பரிசோதனைகளின் உண்மைத்தன்மை, பயன்படுத்த வேண்டிய விதம் தொடர்பாக பயிற்சி பெற்றுள்ள மென்செஸ்டர் மற்றும் ஷெபீல்ட் உள்ளிட்ட சில பிரதேசங்களின் பொதுமக்கள் சுகாதார, சமூக பாதுகாப்பு பணிப்பாளர்கள் இந்த விடயம் குறித்து அரசாங்கத்தால் மேலதிக தகவல்கள் வழங்கப்படும் வரை உடனடி பரிசோதனை நடத்துவதில்லை என முதியோர் இல்லங்களுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக பிரித்தானிய மருத்துவ சஞ்சிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.