English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Dec, 2020 | 6:58 pm
Colombo (News 1st) Burevi சூறாவளியால் 70,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
13 மாவட்டங்களை சேர்ந்த 21,152 குடும்பங்களை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலையால் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் காயமடைந்துள்ளனர்.
Burevi சூறாவளியால் யாழ். மாவட்டமே அதிகளவில் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளது.
நெடுந்தீவிலுள்ள இறங்குதுறை சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவிக்கின்றார்.
குளங்களை அண்மித்து வாழும் மக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுவருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் குறிப்பிடுகின்றார்.
மாவட்டத்தில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களை வீடுகளுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் சின்னத்தம்பி லிங்கேஸ்வரகுமார் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 4,334 பேர்
யாழ். மாவட்டத்தில் 54,163 பேர்
மன்னார் மாவட்டத்தில் 2,227 குடும்பங்களை சேர்ந்த 7,784 பேர்
வவுனியா மாவட்டத்தில் 137 குடும்பங்களை சேர்ந்த 424 பேர்
திருகோணமலை மாவட்டத்தில் 79 குடும்பங்களை சேர்ந்த 265 பேர்
கேகாலை மாவட்டத்தில் 46 குடும்பங்களை சேர்ந்த 190 பேர்
இரத்தினபுரி மாவட்டத்தில் 62 பேர்
பதுளையில் 17 பேர்
கண்டியில் 108 பேர்
மாத்தளையில் 117 பேர்
புத்தளத்தில் 213 குடும்பங்களை சேர்ந்த 703 பேர்
அநுராதபுரத்தில் 18 குடும்பங்களை சேர்ந்த 63 பேர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,925 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தயிலையில், இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் குறிப்பிட்டார்.
வடக்கு, வட மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களின் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, மீனவர்களை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக வானிலை அதிகாரி குறிப்பிடுகின்றார்.
26 Jan, 2021 | 04:15 PM
25 Jan, 2021 | 02:23 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]sfirst.lk
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS