100 நாட்களுக்கு முகக்கவசம் அணியுமாறு ஜோ பைடன் கோரிக்கை 

100 நாட்களுக்கு முகக்கவசம் அணியுமாறு ஜோ பைடன் கோரிக்கை 

100 நாட்களுக்கு முகக்கவசம் அணியுமாறு ஜோ பைடன் கோரிக்கை 

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2020 | 10:29 am

Colombo (News 1st) நூறு நாட்களுக்கு தொடர்ந்து முகக்கவசம் அணியுமாறு அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் கோரியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவியுள்ள நிலையில் இதுவரை அங்கு 14 மில்லியன் பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இரண்டு இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில், தாம் ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்பது முதல் 100 நாட்களுக்கு மக்களை முகக்கவசம் அணியுமாறு அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் கேட்டுக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

முகக்கவசம் அணிவதனூடாக நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், இதனூடாக COVID – 19 தொற்றுக்குள்ளாகுகோரின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமெனவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க எயார்லைன்ஸ், விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென சுகாதார நடைமுறைகளின் பிரகாரம் அறிவிக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழான வௌ்ளை மாளிகை மறுத்து வந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்