வௌ்ள நீரில் மூழ்கி மாடுகள் உயிரிழப்பு 

by Staff Writer 04-12-2020 | 10:09 PM
Colombo (News 1st) மன்னார் - மாந்தை மேற்கு பெரியமடுகுள பகுதிக்கு மேய்ச்சலுக்காக சென்ற மாடுகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன. நீர் வரத்தின்றி காணப்பட்ட பெரியமடுகுள பகுதி கால்நடைகளின் மேய்ச்சல் தரையாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், திடீரென நிலவிய சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட நீர்ப்பிரவாகத்தில் குளம் நிரம்பியுள்ளது. இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்டதேடுதலில் 2 மாடுகளின் உடல்களை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தினர் மீட்டுள்ளனர். குறித்த பகுதியில் நாளையும் உயிரிழந்த மாடுகளின் உடல்களை தேடும் நடவடிக்கை கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படவுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.