சூறாவளியின் போது காணாமல் போன மீனவரின் சடலம் கரையொதுங்கியது 

சூறாவளியின் போது காணாமல் போன மீனவரின் சடலம் கரையொதுங்கியது 

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2020 | 10:19 am

Colombo (News 1st) சீரற்ற வானிலையின் போது கடற்றொழிலில் ஈடுபட்டு காணால் போன ஒருவரின் சடலம் யாழ்ப்பாணம் – காரைநகர், ஊரி பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

38 வயதான ஒருவரின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது.

சுழிபுரம் – பெரியபுலோவை சேர்ந்த குறித்த நபர் பொன்னாலை கடற்பகுதியில் இறால் பிடிக்கச்சென்ற போது நேற்று முன்தினம் காணாமல் போனதாக பொலிஸார் கூறினர்.

சடலம் தொடர்பில் நீதவான் விசாரணை இடம்பெற்றதன் பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்