கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளை மஹர சிறைச்சாலைக்கு மாற்றுமாறு ஆலோசனை

கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளை மஹர சிறைச்சாலைக்கு மாற்றுமாறு ஆலோசனை

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2020 | 10:13 pm

Colombo (News 1st) சிறைச்சாலைகளில் COVID – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அனைத்து கைதிகளையும் மஹர சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு, விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே ஆலோசனை வழங்கியுள்ளார்.

அங்கு அவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை ஏற்படுத்துமாறு ஆலோசனை வழங்குமாறும் கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைக்குள் கொரோனா வைரஸ் பரவுகின்றமை தொடர்பில் இன்று (04) நடைபெற்ற கலந்துரையாடலின்போது இராஜாங்க அமைச்சர் இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்