காற்றாலை மூலம் 110 மெகாவாட் மின்வலுவை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க திட்டம் 

காற்றாலை மூலம் 110 மெகாவாட் மின்வலுவை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க திட்டம் 

காற்றாலை மூலம் 110 மெகாவாட் மின்வலுவை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க திட்டம் 

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2020 | 10:59 am

Colombo (News 1st) காற்றாலையூடாக உற்பத்தி செய்யப்படும் 110 மெகாவாட் மின்சாரத்தை அடுத்த வாரம் முதல் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் முதலாவது காற்றாலையூடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

30 கம்பங்களை கொண்ட காற்றாலையில் 10 கம்பங்களூடாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் தேசிய கட்டமைப்பில் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்உற்பத்தி திட்டத்திற்கு ‘தம்பபவனி’ என பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள ஏனைய 20 கம்பங்களூடாக வெகு விரைவில் மின்னுற்பத்தியை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்