கண்டி, அக்குரணை பாடசாலைகள் சில தற்காலிகமாக மூடப்பட்டன 

கண்டி, அக்குரணை பாடசாலைகள் சில தற்காலிகமாக மூடப்பட்டன 

கண்டி, அக்குரணை பாடசாலைகள் சில தற்காலிகமாக மூடப்பட்டன 

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2020 | 5:56 pm

Colombo (News 1st) கண்டியில் 50 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள 45 பாடசாலைகளுக்கும் அக்குரணையில் 05 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இந்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

கண்டி நகருக்கருகிலுள்ள போகம்பறை கிராமத்தில் இன்று (04) 12 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த கிராமத்தில் இருந்து நகருக்கு பெருமளவிலானோர் வருகை தருவதை கருத்திற் கொண்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக மத்திய மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

சுகாதார தரப்பினரால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக த்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்