TMVP பதில் பொதுச் செயலாளர் நியமனம் 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நியமனம் 

by Staff Writer 03-12-2020 | 6:54 PM
Colombo (News 1st) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஜெகநாதன் ஜெயராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் தற்காலிக வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால், அதனை நிவர்த்தி செய்வதற்காக பிரதி செயலாளராக கடமையாற்றிய ஜெகநாதன் ஜெயராஜ் பதில் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதாக கட்சியின் பொருளாளர் ஆறுமுகம் தேவராஜா தெரிவித்தார். கட்சியின் தலைவர் பணிக்குழு கூடி இந்த தெரிவை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார். கட்சியின் பதில் பொதுச் செயலாளராக ஜெகநாதன் ஜெயராஜ் நியமிக்கப்பட்டமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொருளாளர் ஆறுமுகம் தேவராஜா தெரிவித்தார்.