கொரோனாவிலிருந்து மேலும் 728 பேர் குணமடைந்தனர்

கொரோனாவிலிருந்து மேலும் 728 பேர் குணமடைந்தனர்

by Staff Writer 03-12-2020 | 5:59 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 728 பேர் இன்று (03) குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் COVID - 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19,032 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகியவர்களின் எண்ணிக்கை 25,410 ஆக உயர்வடைந்துள்ளது. தொற்றுக்குள்ளாகிய 6,254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 124 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.