யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்து ஈரான்

புதிய சட்டத்தின் பிரகாரம் யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்த ஈரான்

by Staff Writer 03-12-2020 | 9:47 AM
Colombo (News 1st) தமது நாட்டின் அணு ஆலைகள் ஐநா சபையினால் பரிசோதனை செய்யப்படுவதனை ஈரான் தடுத்துள்ளதுடன் யுரேனியம் செறிவூட்டலை அதிகரித்துள்ளது. ஈரானிய பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யுரேனியம் செறிவூட்டலை 20 வீதம் வரை மீளவும் மேற்கொள்ளுமாறு புதிய சட்டத்தினூடாக அரசாங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. உலக வல்லரசுகளுடன் 2015 ஆம் ஆண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட அணுவாயுத உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை விட இது 3.67 வீதம் அதிகமென சுட்டிக்காட்டப்படுகின்றது. தமது நாட்டை முடக்கத்துக்குள்ளாக்கும் தடைகள் இன்னும் 2 மாதங்களில் தளர்த்தப்படாவிட்டால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சட்டம் அமுல்படுத்தப்படுவதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரௌஹானி (Hassan Rouhani) தெரிவித்துள்ளார்.