ஜனவரியில் கட்சி ஆரம்பம் ; ரஜினி அறிவிப்பு

ஜனவரியில் கட்சி ஆரம்பம் ; ரஜினி அறிவிப்பு

ஜனவரியில் கட்சி ஆரம்பம் ; ரஜினி அறிவிப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

03 Dec, 2020 | 6:44 pm

Colombo (News 1st) எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் இன்று (03) காலை தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வரப்போகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவோம் எனவும் தமிழகத்தில் நேர்மையானதும் ஊழலற்றதும் நேர்மையானதுமான அரசியலை உருவாகுவது நிச்சயம் எனவும் அவர் தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிசயம் நிகழும் எனவும் இதன்போது ரஜினிகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக இன்று காலை அறிவித்த ரஜினி, இதற்கான அறிவிப்பை எதிர்வரும் 31 ஆம் திகதி வௌியிடவுள்ளதாகவும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்