நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு

Update : நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

by Chandrasekaram Chandravadani 02-12-2020 | 1:15 PM
திருகோணமலைக்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியூடாக முல்லைத்தீவுக்கு அண்மித்த பகுதியில் இன்று (02.12.2020) இரவு 7 - 10 மணி வரையான காலப் பகுதிக்குள் பிரவேசிக்கும் என வானிலை ஆய்வு மையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் எதிர்வுகூறப்பட்டுள்ளது. 75 - 85 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று பலமடைந்து 95 கிலோமீற்றர் வேகம் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்படுகின்றது. வடக்கு, வட மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, கிழக்கு, வட மத்திய, மத்திய, மேல், மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. Burevi சூறாவளி இன்றிரவு 7 - 10 மணி வரையான காலப்பகுதியில் நாட்டை ஊடறுத்து செல்லும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.