LPL தொடரில் Jaffna Stallions அணி 54 ஓட்டங்களால் வெற்றி

LPL தொடரில் Jaffna Stallions அணி 54 ஓட்டங்களால் வெற்றி

LPL தொடரில் Jaffna Stallions அணி 54 ஓட்டங்களால் வெற்றி

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2020 | 9:06 am

Colombo (News 1st) லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய இரண்டாவது ஆட்டத்தில் Jaffna Stallions அணி 54 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Stallions அணி சார்பாக தனஞ்சய டி சில்வா 61 ஓட்டங்களையும் அணித்தலைவர் திஸ்ஸர பெரேரா 68 ஓட்டங்களையும் பெற்றனர்.

இவர்கள் இருவரும் 8 சிக்சர்களை விளாசியதுடன் ஐந்தாவது விக்கெட்காக 118 ஓட்டங்களை பெற்றனர்.

Jaffna Stallions அணி 8 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

நவீன் உல் ஹக் 3 விக்கெட்களையும் அசேல குணரத்ன 02 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய கண்டி டஸ்கர்ஸ் அணியால் 17.1 ஓவரில் சகல விக்கெட்களையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

கண்டி டஸ்கர்ஸ் அணி சார்பாக பிரன்டன் டெய்லர் அதிகபட்சமாக 46 ஓட்டங்களை பெற்றார்.

அசேல குணரத்ன 31 ஓட்டங்களை பெற்றார்.

இதேவேளை, விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ள Jaffna Stallions அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

கொழும்பு கிங்ஸ் அணி மற்றும் தம்புள்ளை வைகிங் அணிகள் தலா 2 போட்டிகளில் வெற்றியீட்டி புள்ளிப்பட்டியலில் முறையே இரண்டாம் மூன்றாமிடம் இடங்களில் நீடிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்