Burevi புயல் இன்று நாட்டை கடக்கும் என எதிர்வுகூறல்

'Burevi' புயல் இன்று இலங்கையை கடக்கும் என எதிர்வுகூறல்

by Staff Writer 02-12-2020 | 8:52 AM
Colombo (News 1st) வங்காள விரிகுடாவின் தென் கிழக்கு பிராந்தியத்தில் வலுவடைந்துள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்து, திருகோணமலையிலிருந்து தென் கிழக்காக 330 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது. BUREVI சூறாவளி மேலும் வலுவடைந்து, இன்று (02) மாலை அல்லது இரவு வேளையில் மட்டக்களப்பிற்கும் பருத்தித்துறைக்கும் இடையில் ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 75 கிலோமீற்றர் முதல் 85 கிலோ மீற்றர் வரை வீசலாம் என வளிமண்டலவில் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கடல் பிராந்தியங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதால் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களில் மழை பெய்து வருவதோடு, திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்து வருவதாக அங்கிருக்கும் நியூஸ்பெஸ்ட்டின் அலுவலக செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.