by Staff Writer 02-12-2020 | 7:22 PM
Colombo (News 1st) Update : 7.00 PM ; Burevi சூறாவளியானது இன்னும் 2 மணித்தியாலங்களுக்குள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
=======================================================================
Update : இன்று (02.12.2020) மாலை 03 மணி வரையான தரவுகளின் பிரகாரம், Burevi சூறாவளி திருகோணமலைக்கு 110 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
========================================================================
தென் மேற்கு வங்காள விரிகுடாவில் வலுவடைந்துள்ள Burevi சூறாவளியானது திருகோணமலைக்கு கிழக்கு – தென் கிழக்காக ஏறத்தாழ 140 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
திருகோணமலைக்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியூடாக முல்லைத்தீவுக்கு அண்மித்த பகுதியில் இன்று (02.12.2020) இரவு 7 – 10 மணி வரையான காலப் பகுதிக்குள் பிரவேசிக்கும் என வானிலை ஆய்வு மையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் எதிர்வுகூறப்பட்டுள்ளது.