Burevi சூறாவளி 2 மணி நேரத்திற்குள் இலங்கையை கடக்கவுள்ளதாக எதிர்வுகூறல் 

Burevi சூறாவளி 2 மணி நேரத்திற்குள் இலங்கையை கடக்கவுள்ளதாக எதிர்வுகூறல் 

Burevi சூறாவளி 2 மணி நேரத்திற்குள் இலங்கையை கடக்கவுள்ளதாக எதிர்வுகூறல் 

எழுத்தாளர் Staff Writer

02 Dec, 2020 | 7:22 pm

Colombo (News 1st) Update : 7.00 PM ; Burevi சூறாவளியானது இன்னும் 2 மணித்தியாலங்களுக்குள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

=======================================================================

Update : இன்று (02.12.2020) மாலை 03 மணி வரையான தரவுகளின் பிரகாரம், Burevi சூறாவளி திருகோணமலைக்கு 110 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

========================================================================

தென் மேற்கு வங்காள விரிகுடாவில் வலுவடைந்துள்ள Burevi சூறாவளியானது திருகோணமலைக்கு கிழக்கு – தென் கிழக்காக ஏறத்தாழ 140 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.

திருகோணமலைக்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியூடாக முல்லைத்தீவுக்கு அண்மித்த பகுதியில் இன்று (02.12.2020) இரவு 7 – 10 மணி வரையான காலப் பகுதிக்குள் பிரவேசிக்கும் என வானிலை ஆய்வு மையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்