by Staff Writer 30-11-2020 | 7:08 PM
Colombo (News 1st) நில அளவீட்டிற்கு எதிரான போராட்டத்தின் போது அரச சொத்திற்கு சேதம் விளைவித்ததாக தெரிவித்து முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் அடுத்த வருடம் மே மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.
முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர்அணி உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் பீட்டர் இளஞ்செழியன், முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சம்மேளன நிர்வாக உறுப்பினர் அன்னலிங்கம் சண்முகலிங்கம் ஆகிய நால்வருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.