வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக்கூடும்

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக்கூடும்

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் சூறாவளியாக வலுவடையக்கூடும்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2020 | 3:30 pm

Colombo (News 1st) வங்காள விரிகுடாவை அண்மித்த தாழமுக்க வலயம் சூறாவளியாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனால் எதிர்வரும் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் வடக்கு, கிழக்கு கடபிராந்தியங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என்பதால், கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்