மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவை: புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவை: புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவை: புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2020 | 3:48 pm

Colombo (News 1st) மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்ட மற்றும் வேரஹெர அலுவலகங்களில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சேவை பெறுநர் எதிர்நோக்கும் சிக்கல்களை நிவர்த்திக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

0112 67 78 77 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துவதன் ஊடாக இன்று முதல் சேவைகளை பெறுவதற்கான திகதியை ஒதுக்கிக்கொள்ள முடியும்.

இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் சேவையில் இருக்குமென மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்