நீர்கொழும்பு சிறைச்சாலையில் 4 பெண் கைதிகள் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் 4 பெண் கைதிகள் கூரை மீதேறி ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2020 | 4:58 pm

Colombo (News 1st) வழக்கு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரி நீர்கொழும்பு சிறைச்சாலையில் நான்கு பெண் கைதிகள் கூரை மீதேறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள கைதிகள், ஹெரோயின் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிக்கடை சிறைச்சாலையிலும் கைதிகள் சிலர் கூரை மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்கும் பிரதான நுழைவாயில் மூடப்பட்டுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஸவுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் ஐந்து கைதிகள் கூரை மீதேறி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்