சிட்னியில் அதிக வெப்பநிலை பதிவு

சிட்னியில் அதிக வெப்பநிலை பதிவு

by Bella Dalima 29-11-2020 | 3:45 PM
Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. சிட்னி நகரில் இன்று பகல் 40 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் சிட்னி நகரில் மீண்டும் எரிமலை குழம்பு வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நியூ சவுத்வேல்ஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிட்னி நகரின் ஒப்ஸர்வேட்டர் ஹில் பகுதியில் இதற்கு முன்னர் கடந்த 1967 ஆம் ஆண்டு அதிக வெப்பநிலை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் தொடக்கம் இந்த வருட ஆரம்ப பகுதி வரையில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 24 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையானது. அவுஸ்திரேலிய வரலாற்றில் பாரிய காட்டுத்தீயாக இது பதிவானதுடன், தீயினால் அரிய வகை உயிரினங்கள் பலவும் உயிரிழந்த நிலையில், பில்லியன் கணக்கான விலங்கினங்கள் இடம்பெயர்ந்தன. சுமார் மூவாயிரம் வீடுகள் முற்றாக தீக்கிரையானதுடன் 33 பேர் வரை உயிரிழந்தனர்.