தம்புள்ளை கல்வி வலய பாடசாலைகள் மூடப்பட்டன

தம்புள்ளை கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகள் 5 நாட்களுக்கு மூடப்பட்டன

by Staff Writer 29-11-2020 | 2:43 PM
Colombo (News 1st) மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை (30) முதல் 5 நாட்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கொரோனா நோயாளர்கள் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தம்புள்ளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சித்தார விதானகே குறிப்பிட்டார். பொருளாதார மத்திய நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட PCR சோதனைகளின் போது குறித்த மூன்று பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சித்தார விதானகே குறிப்பிட்டார். சுமார் 200 பேருக்கு PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். கலஹா, எப்பாவல மற்றும் கலேவல ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று பேருக்கே கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் பொருளாதார மத்திய நிலையத்திற்கு சென்றிருந்த மூன்று கடைகள் மூடப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்