சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சி: மன்னாரில் எழுவர் கைது

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சி: மன்னாரில் எழுவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

29 Nov, 2020 | 3:24 pm

Colombo (News 1st) சட்டவிரோதமாக படகில் இந்தியாவிற்கு செல்ல முயன்ற 5 பேரும், 2 ஆட்கடத்தல்காரர்களும் மன்னார் – பேசாலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

29 வயது இளைஞர் ஒருவரும், 29 வயது யுவதி ஒருவரும், 38 வயதான பெண்ணொருவரும், 08 மற்றும் 09 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

32 மற்றும் 37 வயதான பேசாலை பகுதியை சேர்ந்த இரண்டு ஆண்களே ஆட்கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பேசாலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்