English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
29 Nov, 2020 | 8:51 pm
Colombo (News 1st) அம்பாறை மாவட்டத்தின் மஹஓய பிரதேச செயலகப் பிரிவில் பொல்லேபெத்த கிராமத்தின் கல்வலயாய வனத்தில் பாரியளவில் காடழிப்பு இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரம்கன்ன ஓய எல்லையான இந்தப் பகுதியில் ரம்மியமான வன வளங்கள் இருக்கின்றன.
இயற்கை வளங்களுடன் கூடிய இந்த இடத்தின் காணிகள் வெவ்வேறு நிறுவனங்கள், பல்வேறு செயற்றிட்டங்களுக்காக துப்புரவு செய்யப்படுகின்றன.
அவ்வாறான அழிவுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் ‘பிம்தென்ன பத்துவை பாதுகாக்கும் ஒருங்கிணைந்த முன்னணி’ எனும் பெயரில் புதிய மக்கள் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இயற்கை வளங்களை அழிக்கும் செயற்பாடுகள் இங்கு இடம்பெற்று வருவதாக பிம்தென்ன பத்து பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி சமந்த வித்யாரத்ன கூறினார்.
சில நிறுவனங்கள் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பை இயந்திரங்கள் மூலம் துப்புரவு செய்துள்ளன.
மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் வன பாதுகாப்பு திணைக்களத்திற்கு அறிவிக்காமல் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக பிம்தென்ன பத்து முன்னணி தெரிவிக்கின்றது.
அரச நிதியை செலவழித்து காடு வளர்க்கப்பட்ட இடம் தற்போது நிறுவனங்களால் சட்டவிரோதமாக துப்புரவு செய்யப்பட்டு வன வளம் அழிக்கப்படுவதாக சமந்த வித்யாரத்ன குறிப்பிட்டார்.
11 Jan, 2021 | 06:01 PM
29 Dec, 2020 | 07:20 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS