அபிவிருத்திக்கு இயற்கை வளங்களை பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளை ஆராய ஜனாதிபதி செயலணி நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

29 Nov, 2020 | 8:31 pm

Colombo (News 1st) அபிவிருத்திப் பணிகளுக்காக கல், மணல், மண் போன்ற வளங்களை பயன்படுத்தும் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை ஆராய்வதற்காக ஜனாதிபதி செயலணியொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரச்சினைகளை தவிர்த்துக்கொண்டு அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக ஆராய்வதே இந்த செயலணியின் நோக்கம் என அதன் தலைவரான பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்தார்.

இயற்கை வளங்களுடன் கூடிய தொல்பொருள் இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக வர்தமானியில் அறிவிக்கப்படவுள்ளன.

தற்போதைக்கு 23 மாவட்டங்களில் இயற்கை வளங்கள் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் நூற்றுக்கு 10 வீதமானவை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் செயலணியின் தலைவர் J.J.ரத்னசிறி குறிப்பிட்டார்.

இந்த செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, இந்த செயலணியில் தலைவர் J.J.ரத்னசிறி தவிர மேலும் 18 பேர் இடம்பெற்றுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்