LPL: Galle Gladiators-ஐ வீழ்த்தியது Jaffna Stallions

LPL: Galle Gladiators-ஐ வீழ்த்தியது Jaffna Stallions

LPL: Galle Gladiators-ஐ வீழ்த்தியது Jaffna Stallions

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2020 | 3:33 pm

Colombo (News 1st) லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் Galle Gladiators அணிக்கு எதிரான போட்டியில் Jaffna Stallions அணி 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது.

கிளிநொச்சி எக்ஸ்பிரஸ் செபஸ்தியாம்பிள்ளை விஜயராஜூம் Jaffna Stallions அணிக்காக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Galle Gladiators அணி சார்பாக தனுஸ்க குணதிலக்க 38 ஓட்டங்களைப் பெற்றார்.

பானுக்க ராஜபக்ஸ 21 ஓட்டங்களுடனும் மிலிந்த சிறிவர்தன 02 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

அணித்தலைவர் சயிட் அஃப்ரிடி 06 சிக்சர்கள் 03 பவுண்டரிகளுடன் 23 பந்துகளில் 58 ஓட்டங்களை விளாசினார்.

Galle Gladiators அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்களைப் பெற்றது.

Duanne Olivier 04 விக்கெட்களை வீழ்த்தினார்.

Jaffna Stallions அணி வெற்றியிலக்கை 19.3 ஓவர்களில் 02 விக்கெட் இழப்பிற்கு கடந்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மீனோத் பானுக்க 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

சொய்ப் மலிக் 27 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய அவிஸ்க பெர்னாண்டோ 7 சிக்சர்கள் 5 பவுண்டரிகளுடன் 63 பந்துகளில் 92 ஓட்டங்களை விளாசி வெற்றியை உறுதி செய்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்