மீண்டும் தலைதூக்கும் படைப்புழு  

by Staff Writer 28-11-2020 | 1:46 PM
Colombo (News 1st) படைப்புழு தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு , அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். படைப்புழு தாக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு விசேட குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் M.W.வீரகோன் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் பிராந்திய விவசாய அதிகாரிகள் ஊடாக அறியப்படுத்துமாறு விவசாயிகளிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.