க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பான அறிவித்தல்

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பான அறிவித்தல்

by Staff Writer 28-11-2020 | 1:16 PM
Colombo (News 1st) கல்வி பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களுக்காக இம்முறை தயாரிக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் தொடர்பில் கேட்டறிவதற்காக ஆசியர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அடுத்த வார இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், அனைத்து க.பொ.த சாதாரண தர ஆசிரியர்களும் info.moe.gov.lk எனும் இணையத்தள முகவரிக்குள் பிரவேசித்து தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. Online மற்றும் வழமையான நடைமுறையின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பாடத்திட்டம் தொடர்பில் வெவ்வேறாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். மேற்கூறிய இணையத்தள முகவரிக்குள் பிரவேசிக்க முடியாத ஆசிரியர்கள், தமது பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், பாடசாலை - மாகாண மற்றும் வலயக் கல்வி பணிமனையின் தொடர்பிலக்கம் என்பவற்றை [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவதனூடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை உத்தேசிக்கப்பட்ட தினத்திலேயே ஆரம்பிப்பது குறித்து அடுத்த 10 நாட்களுக்குள் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சினால் கடந்த 26 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு தற்போது உத்தேசிக்கப்பட்டுள்ளது.