சக்தி சுப்பர் ஸ்டார் சீசன் 7: மகுடம் சூடினார் வடக்கின் மிருதுஷா

சக்தி சுப்பர் ஸ்டார் சீசன் 7: மகுடம் சூடினார் வடக்கின் மிருதுஷா

சக்தி சுப்பர் ஸ்டார் சீசன் 7: மகுடம் சூடினார் வடக்கின் மிருதுஷா

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2020 | 9:57 pm

Colombo (News 1st) சக்தி சுப்பர் ஸ்டார் சீசன் 7 இசை மகா யுத்தம் வெற்றியாளராக வடமாகாணத்தை சேர்ந்த மிருதுஷா மகுடம் சூட்டினார்.

இறுதிப் போட்டி இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் நடைபெற்றது.

வடக்கு , மத்தி, கிழக்கு , மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் களமிறங்கினர்.

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மிருதுஷாவும் மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிருஷிகாவும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கல்யாண் சரணும் மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விஜயலோஷனும் களமிறங்கினர்.

இவர்களில் மிருதுஷா வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார்.

நடுவர்களின் தீர்ப்பு மற்றும் நேயர்களின் sms என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு போட்டியின் வெற்றியாளராக மிருதுஷா தெரிவானார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்