கொழும்பிலிருந்து ஹட்டன் சென்ற நால்வருக்கு கொரோனா

கொழும்பிலிருந்து ஹட்டன் சென்ற நால்வருக்கு கொரோனா

by Staff Writer 28-11-2020 | 3:44 PM
Colombo (News 1st) ஹட்டன் - கொட்டகலையில் 04 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொட்டகலை க்ரேக்லி மற்றும் ஊட்டன் ஆகிய தோட்டங்களை சேர்ந்த மூன்று பேருக்கும் தலவாக்கலை கிரேட் வெஸ்ட்டன் தோட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கொழும்பிலிருந்து வருகை தந்தவர்கள் என கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர் ராகவன் தெரிவித்தார். கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.